இந்தக் கருத்து தொடர்பாக பிரித்தானிய தூதுவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு, கிழக்கிலும் படையினர் நிலை கொண்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், மிகப்பெரியளவிலான இராணுவத்தினர் வடக்கில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியத் தூதுவர் கூறியிருந்தார்.
இவரது இந்தக் கருத்து பிரித்தானியத் தூதரகத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள காணொலி கேள்வி - பதில் நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. பிரித்தானியத் தூதுவரின் இந்தக் கருத்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், பிரித்தானியத் தூதுவரின் கருத்து கவனமாக ஆராயப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அதன் பின்னர், அவர் மீதான பொருத்தமான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment