Translate

Saturday 26 May 2012

நவநீதம்பிள்ளையை இலங்கை வர அனுமதிக்க வேண்டும்!– அமெரிக்கா வேண்டுகோள்


ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின் போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் ஐ.நாவுடன் நெருக்கமாக இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்கு பீரிஸ் தலைமையிலான இலங்கைக்  குழுவினர், நவநீதம்பிள்ளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்கனவே பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டு விட்டதாக பதிலளித்துள்ளனர்.
ஆனால் அவர் தனது பயணத்துக்கு முன்பாக உண்மை கண்டறியும் அதிகாரிகள் குழுவொன்றை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும்  இலங்கைக் குழுவினர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் கூறியுள்ளனர்.
முன்னதாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment