Translate

Saturday, 26 May 2012

பிரித்தானியவில் இருந்து நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர் விவகாரம் பாராளுமன்றத்தின் கவனத்தில்!

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு வரும் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் தொடர்பில், பிரித்தானிய பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில், கடந்த 23-05-2012 புதன்கிழமை, பிரித்தானிய பாராளுமன்ற வளாக Committee Room 9 கூடத்தில், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக, பிரித்தானிய செயலகம் மேற்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் எதிரொலித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வெரேந்திர சர்மா அவர்கள் இவ்விவகாரத்தினை, இதர பாரளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது, 2010ம் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன, சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும, ; தொடர்சியாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு வரும் ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வெரேந்திர சர்மா அவர்கள் இச்சந்திப்பினை தலைமை தாங்கி நடத்தினார். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ரசல் பிரவுண், ஜோன் மக்டோனால் ஆகியோர் இதில் பங்கெடுத்திருந்தனர்.
பிரித்தானிய குடிவரவு திணைக்களத்தினால் 2010ம் ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு , பின்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன் தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும்
எதிர்வரும் மே-31ம் நாள் பிரித்தானியாவில் இருந்து PVT030 விமானத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடவுள்ள அகதிகள் குறித்து, பிரித்தானிய குடிவரவுத் திணைக்களம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமெனவும், இச்சந்திப்பின் போது கோரிக்கை விடுக்கப்பட்டதாக நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சின் பிரித்தானிய செயலர் வாசுகி முருகதாஸ் அவர்கள் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப்பிரதமர் உருத்திராபதி சேகர், அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ், அவைப்பிரதிநிதிகள் நிமலன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

No comments:

Post a Comment