ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கை வரவுள்ள தமது குழுவின் உறுப்பினர்களை ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) நேற்று நியமித்திருக்கிறார்.
இலங்கை வரும் குழுவுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆசிய, பசுபிக், மத்தியகிழக்கு, வட ஆபிரிக்க பிரிவுகளுக்குப் பொறுப்பான தலைவர் ஹன்னி மெகாலி தலைமையேற்கிறார். இவருடன்களச் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கான பிரிவின் மூத்த அதிகாரி அஸ்ரா பெட்ராவும், மேலும் சில உயர்நிலை அதிகாரிகளும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
செப்ரெம்பர் 14ஆம் திகதி வரும் இந்தக் குழு ஆறு நாள்கள் தங்கியிருந்து கொழும்பில் அரச, எதிர்க்கட்சி மற்றும் தமிழ்க்கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைப் பயணம் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளையும் இந்தக் குழு செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இறுதி போர் நடைபெற்ற வன்னி பெருநிலப்பரப்பிற்கும் செல்வதற்கு இந்தக் குழு இலங்கை அரசிடம் அனுமதி கேட்டுள்ளபோதிலும் இன்னும் அது வழங்கப்படவில்லை. அந்தக் கோரிக்கையை இலங்கை அரசு பரிசீலித்துவருவதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment