Translate

Wednesday, 29 August 2012

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரனை நடத்த வேண்டும்; கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரனை நடத்த வேண்டும்; கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை
news
இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரனை நடத்த வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை விடுத்துள்ளார்.


உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தேசிய செயற்திட்டம் வரவேற்கப்பட வேண்டியது எனினும், சரியான செயற் திட்டங்களை உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையிலான நம்பகமான உள்நாட்டு பொறிமுறைமையொன்றை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே கனேடிய அரசின் நிலைப்பாடு.

தூர நோக்குடன் செயற்படுவதன் மூலமே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment