
இந்த மோதல் சம்பவம் 26ம் திகதி மாலை இடம்பெற்றதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய கோபால் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இரத்தோட்டையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்று கொண்டிருந்த போது இரு குழுக்கள் இவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் இரத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின் இவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மண்சரிவுக்குள்ளான இரத்தோட்டை நிக்கலோயா பகுதியை பார்வையிடச் சென்ற தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை பெரும்பான்மை இன இளைஞர்கள் அடித்து கொலை செய்தமை சம்பந்தமாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்றதை கேள்விப்பட்டவுடன் பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுடன் தொடர்பு கொண்டு அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததன் மூலமாக மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பெரமுனவுடன் தொடர்பு கொண்டு சம்பவம் சம்பந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment