
கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியுடன் செயல்பட்டுவரும் தமர அமில தேரரும் ஜயலத் ஜெயவர்த்தனவும் சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நாட்டின் பல்வேறு இனங்களுக்கிடையே பிரிவினையைத் தூண்டிவிட சில சக்திகள் முயலுவதாகவும், அதனை முறியடித்து இணங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்த்தால்தான் நாட்டுக்கு நல்லது என்றும் தமர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மகசின் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, ரிமாண்ட் சிறைச்சாலை போன்ற இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னூறுக்கும் அதிகமான விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment