Translate

Monday 9 April 2012

போர்க்குற்றம் :தனித்தனியாக விசாரிக்கப்படவேண்டும்:அமெரிக்கா.


நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ள மற்றும் அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படாதுள்ள நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலைமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க செனட்டில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிற்ப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப் இலங்கையில் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் ஒரு சில இதோ:
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்.
பொதுமக்களை இலக்கு வைத்து தாக்கியது, போர் விலக்கல் பகுதிகளில் பீரங்கி, மற்றும் குண்டுவீச்சுத் தாக்குதல், சரணடைந்த விடுதலைப்புலிகளை கொலை செய்தது, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், மனிதாபிமான உதவி வழங்கல், கட்டாயமாக காணமற்போன சம்பவங்கள், கைது மற்றும் தடுத்து வைத்தல் கொள்ளைகள் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழு பதிலளிக்கத் தவறிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு விசாரணைகளும் சுதந்திரமானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கும் விதத்திலும் இடம் பெற வேண்டும். இலங்கையின் நீண்டகால நண்பனான அமெரிக்கா நல்லிணக்க முயற்சிகளுக்கான ஆதரவாக இருக்கும்.
உண்மையை ஒப்புக்கொள்வது கடந்த காலத் தவறுகளைக் கையாள்வதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, பொறுப்பான வெளிப்படையான மற்றும் முறைப்படியான நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதிலேயே அந்த நம்பிக்கை தங்கியுள்ளது”

No comments:

Post a Comment