Translate

Monday, 9 April 2012

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்: அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை


இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்: அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை



கொழும்பு, ஏப்.8: இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க கூடிய சாத்தியம் அதிகரித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிய நாடு ஒன்று ஐ.நா. தீர்மானத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுவது அவ்வளவு நல்லதல்ல என்ற அடிப்படையிலும், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமைக்காக, இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வலுப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதையும் அடுத்து, இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் இலங்கை மக்கள் தற்போது உள்ள ஆட்சியை மாற்றி அமைக்க முற்படுவர். எனவே எந்நேரமும் பொருளாதாரத் தடைபற்றிய அறிவித்தல் வெளியாகலாம் என்பதால் இலங்கை அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
.

No comments:

Post a Comment