Translate

Monday, 9 April 2012

இலங்கையில் தொடர்ந்து தாக்கப்படும் தமிழர்கள்

இலங்கை: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது இலங்கை இராணுவம் ஈவு இரக்கம் இன்றி லட்சக்கணக்காண ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பலவும் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாட்டு சபையில் கொண்டு வந்தன. கடைசி நேரத்தில் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்த இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. 


இத்தீர்மானத்திற்கு இந்தியாவும் ஆதரவளித்ததால் மீண்டும் அங்கு வசிக்கும் தமிழர்கள் மீது சிங்களத்தவர்கள் கடும் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த வாரம் இலங்கையின் மட்டகளப்பில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தி மற்றும் இரண்டு தமிழறிஞர்களின் உருவ சிலைகள் அடித்து உடைக்கப்பட்டன. மேலும் தமிழர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஒரு சிவன் கோவிலுக்குள் புகுந்த இலங்கை இராணுவம் அங்கு பிரார்த்தனை மேற்கொள்ள வந்த தமிழர்களை விரட்டியடித்தது. இந்த சம்பவங்கள் அங்கு வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது என்பதையே உணர்த்துகிறது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=8776

No comments:

Post a Comment