Translate

Tuesday, 28 June 2011

யூலை 5, தற்கொடையாளர் நாள்! பிரித்தானியாவில் நிகழ்வுகள்.


யூலை 5, தற்கொடையாளர் நாள்பிரித்தானியாவில் நிகழ்வுகள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையில் தடைநீக்கிகளாக உயிராயுதமாகி தம்மையேஅர்ப்பணித்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து வீரகாவியமாகிவிட்டதற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் "தற்கொடையாளர் நாள்நிகழ்வுகள் எதிர்வரும்யூலை 5 இல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.


காற்றிலும் நீரிலும் கலந்த கந்தகத்துகழ்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த"தற்கொடையாளர் நாள்நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

05-07-2011 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 முதல் 9:30 வரை நடைபெறவுள்ள இந்த வணக்கநிகழ்வில் பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறுஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எம்மோடு வாழ்ந்துஎம்மோடு உறவாடி சிரித்த முகத்தோடு மில்லர்அங்கையற்கன்னிவரிசையில் சரித்திரம் படைத்த தேசப்புயல்களை நெஞ்சில் நிறுத்தி நினைவு கொள்வோம்.


முகம் தெரியா மனிதர்களாய் வாழ்ந்து தமக்கான இலக்கு வரும்வரை காத்திருந்து தமிழர்கள்இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தம்மை இல்லாதொழித்து ஊமையாய் உறங்கிக்கொண்டிருக்கும் பெரும் சரித்திரம் தமிழர் வரலாற்றின் வீரகாவியம்அந்த இரும்புமனிதர்களின் உடல்களும்உணர்வுகளும் கலந்த காற்றை சுவாசிக்கும் தமிழீழவிடுதலை விரும்பிகளின் இதயம் அவர்களின் பெயர் சொல்லியே துடிக்கும்அதுபுதியதோர் புரட்சியாய் வெடிக்கும்அந்த வெடிப்பின் நடுவே தமிழீழம் மலரும்அன்றையநாள் தமிழீழ வான் பரப்பில் இந்த தற்கொடையாளர்களான இரும்புமனிதர்கள்நட்சத்திரங்களாய் மின்னுவர் என்பது உறுதி.


நிகழ்வு
நடைபெறும் இடம்:
NORTH MITCHAM ASS LTD

51, Woodland Way,
Mitcham, Surrey,
CR4 2DY

காலம்
: 05--07-2011
நேரம்
:
 மாலை 6:30 முதல் 9:30 வரைமேலதிக விபரங்களுக்கு074 0021 9654

No comments:

Post a Comment