மலேசியத் தமிழ் மக்களின் பகிரங்கக் கொந்தளிப்பை அடுத்து மலேசியாவுக்கான வருகையை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ரத்து செய்தார்.
எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் நாள் தொடங்கி 6-ஆம் நாள் வரை நடைபெறவிருக்கும் அனைத்துலக இஸ்லாமிய பொருளாதார ஆய்வரங்கில் கலந்துக்கொள்ள வரும்படி ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஈழத் தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே மலேசிய மண்ணில் கால் பதிக்க அனுமதிக்கக்கூடாது என்று தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதனை அடுத்து மலேசியாவுக்கான வருகையை ரத்து செய்ய ராஜபக்சே முடிவு செய்திருக்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதனிடையே, தவிர்க்க முடியாத காரணத்திற்காக மலேசிய வருகையை ராஜபக்சே ரத்து செய்திருக்கிறார். மலேசியத்தமிழ் மக்களின் எதிர்ப்புக் காரணமாக அல்ல என்று இலங்கை தூதரகம் கூறியுள்ளது.
உலக தமிழர்களின் எண்ணத்திலும் உணர்விலும் ரத்தக்கறை படிந்த மனிதனாக உலா வரும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் வருகை ரத்தாகியிருப்பது இங்குள்ள மலேசியத் தமிழர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
No comments:
Post a Comment