மே மாதம் 2009 ஆண்டு தமிழருக்கு நடந்த அவலம் நீங்கள் அறிந்ததே. ஆனாலும் 40, 000 அப்பாவிப் பொது மக்களின் உயிரழிக்கப்பட்ட இத்துயரத் தருணங்களின் விபரங்கள் மேற்கு உலகினருக்கு மிகக் குறைவாகவே தெரிய வந்திருக்கின்றன.
அண்மையில் ஜக்கிய நாடுகள் சபையினரால் வெளியிடப்பெற்ற அகநிலை அறிக்கையின் மூலம் தமிழருக்கு எதிராக தூண்டப்பட்ட போர்க் குற்றங்கள், இன அழிப்பு முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்திருந்தாலும், இவ்விபரங்கள் சாதாரண மேற்குலக மக்களைப் போய் அடையுமா என்பது சந்தேகமே.
இந்நிலையில், வன்னிப்குதியில் ஐ.நா. சபையின் நிவாரணப் பணி அதிகாரியாக பணியாற்றிய இங்கிலாந்து நாட்டவரான திரு. பெஞ்சமின் டிக்ஸ் என்பவர் வன்னி அவலத்தை உலகுக்கு வெளிக்காட்டும் முகமாக பல-ஊடகப் புத்தக வெளியீட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
வன்னியின் அவலங்களை புவியியல் தகவல்கள், புகைப்படங்கள், வரைகலை ஓவியங்கள், செய்திகள், மற்றும் பல-ஊடக உத்திகள் மூலம் வெளிக்காட்ட எத்தணிக்கும் இத்திட்டம் எமது இனத்தின் இன்னல்களை மேற்குலக மக்களுக்கு தெரியப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாகும்.
தமிழரின் வரலாற்றில் இடம்பெறக் கூடிய இத்திட்டத்தை அங்கீகரிக்கும் அதே வேளை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நிதி உதவி வழங்கி ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு
http://www.kickstart...-vanni?ref=city
www.thevanni.co.uk
Facebook: Benjamin Dixie
Website: http://thevanni.co.uk
Facebook: the vanni
No comments:
Post a Comment