மக்களுக்கான இறைமை அதிகாரங்கள் நியாயமாக வழங்கப்படல் வேண்டும் என்று ஹிருணிகா பிரே மச்சந்திர ஜனாதிபதியிடம் மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
80 ஆம் ஆண்டுகளிலிருந்து எனது தந்தையின் அரசியல் பயணம் எவ்வாறானது என கொலன்னாவைப் பகுதி மக்கள் மாத்திரமன்றி, அனைத்து மக்களும் நன்கு அறிவார்கள்.
79 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசு இருந்த போது இலங்கை மக்கள் வீட்டுக்கு வெளியே வரு வதற்கே அச்சமடைந்த காலப்பகுதி அது.
அப்போது அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது, மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறங்கி நீலக்கொடியை கொலன்னாவையில் பறக்கவிட்ட ஒரே தலைவர் எனது தந்தை. கடந்த ஏழு மாதங்களாகப் பிரதான சந்தேகநபரைச் சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டு மென்றே நான் கூறி வருகிறேன்.
தற்போது இந்த வழக்கு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் தரப்பு மற்றும் துமிந்த சில்வா உள்ளிட்ட நாட்டின் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தரப்பினரின் வழக்காக மாறியுள்ளது.
இந்த மனு யாருடைய அழுத்தங்களுக்கும், தேவைகளுக்கும் அமைய எழுதப்பட்ட ஒன்று அல்ல. எனது உள்ளத்தில் பதிந்துள்ள அனைத்து விடயங்களையும் இந்த மனுவில் சேர்த்துள்ளேன்.
இந்த மனுவை படித்தவுடன் கிழித்துப்போடுவதா, சிந்தித்து நியாயத்தை வழங்குவதா? என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment