Translate

Wednesday, 23 May 2012

மன்னார் ஆயரை புத்த பிக்குவுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரிஷாட் மன்னிப்பு கோர வேண்டும் :அடைக்கலநாதன் எம்.பி.


  மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் தெரிவித்தார்.


தமிழ் அரசியல் அகதிகள் இன்று தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக நாளை வியõழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டøமøப்பும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தவிருக்கின்றுது. வீண் பேச்சுக்களை பேசி நோட்டை குட்டிச் சுவராக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஏற்றுமதி இறக்குமதி குறித்து இங்கு பேசப்படுகின்ற நிலையில் எமது நாட்டின் ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமானால் நாட்டிலுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்

எமது நாட்டில் அதிகமான வளங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை மேம்படுத்த முடியாதிருப்பதன் காரணமே நாட்டிலுள்ள பிரச்சினைகள் தான்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமாக எமது மக்கள் வாழ வேண்டும். அதற்கு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும். அரசியல் தீர்வொன்று வந்துவிட்டால் நாட்டில் பிரச்சினைகளுக்கு இடமிராது. அதேபோல் இராணுவத்துக்கும் அதிகமான நிதியினை ஒதுக்க வேண்டிய தேவையும் எழாது.

நாட்டை வளமாக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற அரசாங்கம் அதற்கான தடைகளை முதலில் நீக்க வேண்டும்.

புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் இராணுவப் பிரசன்னங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் நாட்டிலுள்ள பிரச்சினைகள் விஸ்வரூபமெடுக்கின்றன.

தம்புள்ளயில் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டபோது பௌத்த போதனைகளைப் போதிக்கும் பிக்கு ஒருவரே முன்னின்று செயற்படுத்தினார். இதனை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறான புத்த பிக்குவுடன் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை ஒப்பிட்டு அமச்சர் ரிஷாட் பதியூதீன் இங்கு பேசியிருக்கின்றார்.

மன்னார் ஆயர் இந்நாட்டில் தீர்வு ஒன்று வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர். அவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்தார் என்பதற்காக நான்காம் மாடியில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அவ்வாறான ஒருவரை புத்த பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசியமை குறித்து வன்மையாகக் கண்டிக்கின்றோம். அது மாத்திரமின்றி அவ்வாறு பேசியமைக்காக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

மேலும் இவ்வாறான நிலைமைகளே இனப்பிரச்சினை தீர்க்க முடியாமைக்கான காரணிகளாகும். எனவே வீண் பேச்சுக்களை பேசி நாட்டை குட்டிச் சுவராக்காது நியாயமான அரசியல் தீர்வொன்றை பெறுவதற்கு அரச கூட்டமைப்புடன் பேசித் தீர்க்க வேண்டும் என்றார். 

No comments:

Post a Comment