Translate

Wednesday, 23 May 2012

முல்லைத்தீவு வட்டுவாகலில் சிங்கள குடியேற்றமும், முளைத்துள்ள புத்தவிகாரையும்!


முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்தை துரிதப்படுத்தும் முகமாக வட்டுவாகல் கிராமத்தில் நிறுவப்பட்ட புத்தவிகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
இங்கு புத்த பிக்குகளும், அதனை சுற்றி சிங்கள குடியேற்றங்களும் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதி யுத்தத்தின் போது மிகப்பெரிய இனப்படுகொலை நடந்த வட்டுவாகல் கிராமத்தில் அக்கிராம தமிழ் மக்கள் செல்வதற்கோ மீளக்குடியமர்வதற்கோ அனுமதிக்கப்படாத நிலையில் புத்தவிகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களை அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியேறுவதற்கு கண்ணிவெடி இருப்பதாக கூறி தடுத்து வரும் சிங்கள படையினர் அங்கு புத்த விகாரையை அமைத்து சிங்களவர்கள் நடமாடுவதற்கு அனுமதித்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவின் கரையோரமான கொக்கிளாயிலிருந்து முள்ளிவாய்க்காலை இணைக்கும் கரையோரப் பாதை சீனாவின் ஆதரவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பாதை திறக்கப்பட்டது.
நன்றி படங்கள் தமிழ்நெற்

No comments:

Post a Comment