Translate

Wednesday, 23 May 2012

இராணுவ தளபதியுடன் தனியாக சந்திக்க அழைந்தது யாழ்,பல்கலை நிர்வாகம் மறுத்தார்கள் மாணவ பிரதிநிதிகள்


இராணுவ தளபதியுடன் தனியாக சந்திக்க அழைந்தது யாழ்,பல்கலை நிர்வாகம் மறுத்தார்கள் மாணவ பிரதிநிதிகள்
news
யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளை யாழ்ப்பாண இராணுவ கட்டளை தளபதியான ஹத்துருசிங்கவுடன் தனியான சந்திப்பொன்றை நேற்றைய தினம் பல்கலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த போதிலும் மாணாவர் பிரதிநிதிகள் இதனை மறுத்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ் பல்கலைக்கழக மாணவர் தர்சானந்த் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களும் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை காலவரையாற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்,

நேற்றைய தினம் பல்கலை நிர்வாகம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ஹத்துருசிங்கவுடன் தனியாக ஒரு சந்திப்பில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தது.

எனினும்  மாணாவர் பிரதிநிதிகள் இதனை மறுத்துவிட்டனர் எந்த விதமான சந்திப்புக்கள் ஏற்பாடு செய்வது  என்றாலும் பகிரங்கமான இடமொன்றில் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்பாடு செய்துதரப்படும் கூட்டத்தில் சந்திப்புக்கு தயாராக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனிமையில் சந்திப்பதால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பாதிக்கும் எனவும் மாணவர்களின் முகங்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் மாணவர்கள் தரப்பில் சந்தேகம் வெளி யிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment