மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, தெடியாகல பகுதியில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையமொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ரி௫6 துப்பாக்கிகளைப் போன்ற பகுதியளவில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பலகைத் தொழிற்சாலை என்ற போர்வையில் இந்த ஆயுத தயாரிப்பு நிலையம் இயங்கியுள்ளது. இம்முற்றுகையின்போது ஒரு நபரை பொலிஸார் கைது செய்தனர்.
மேற்படி துப்பாக்கிகள் தலா 50,000 முதல் 100,000 ரூபா விலையில் விற்கப்பட்டதாகவும் இவற்றில் பெரும்பாலானவை இரட்டைக் குழல் துப்பாக்கிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எந்த தோட்டாவையும் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கிகளை தயாரிக்கும் ஆற்றலை 40 வயதான மேற்படி சந்தேக நபர் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கிய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment