Translate

Wednesday, 23 May 2012

யாழில் காணாமல் போன சிறுவன் மதம் - பெயர் மாற்றப்பட்ட நிலையில்


யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களினில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதேயிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். மதம் மாற்றப்பட்டு இச்சிறுவன் வளர்க்கப்பட்டு வருகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

முதலில் தன்னை கடத்திவந்த சிலர் குறித்த வீட்டாரிடம் கையளித்ததாகவும் அங்கு தான் வேலையாளாக இருந்ததாகவும் பின்னரே தன்னை மதம் மாற்றி பெயர் மாற்றத்தையும் அவர்கள் செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
அத்துடன் குறித்த சிறுவன் மத ரீதியான கிரியைகளுக்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ள சிறார்களது நிலைபற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த 19ம் திகதி சனிக்கிழமையும் வடமராட்சி நவிண்டில் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் காணாமல் போயுள்ளான். தொண்டமனாறு கெருடாவில் பகுதியை சேர்ந்த மதகுரு ஒருவரது மகனான யோகேஸ்வரக்குருக்கள் செந்தூரன் என்பவனே காணாமல் போயுள்ளான். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஸன் கல்லூரி 10ம் வகுப்பு மாணவனான இவன் தனியார் கல்வி நிலையத்திற்கென புறப்பட்டு சென்றிருந்த வேளையில் காணாமல் போயுள்ளான்.
ஏற்கனவே காரை நகரில் மனநிலை குன்றிய யுவதியொருத்தியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் மத ரீதியான முரண்பாடுகள் மீண்டும் முனைப்பு பெற்றுள்ளது. இந்நிலையில் காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கில் மீட்கப்பட்டுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment