Translate

Thursday, 24 May 2012

கிளிநொச்சியில் கனேடிய பிரஜை படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் ஐவர் கைது


கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட கனேடியப் பிரஜையின் கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போரின் போது வன்னியில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த அந்தோனிப்பிள்ளை ஜெயரட்ணம் (வயது52) அண்மையில் பரந்தன் கமறிக்குடாப் பகுதியில் உள்ள தனது சொந்த இடத்திற்குத் திரும்பி வாழ்ந்து வந்தார்.
கடந்த 3ஆம் திகதி இரவு கோரமான முறையில் இவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை நடத்துமாறு கனேடியத் தூதரகம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுத்திருந்தது.
இதனையடுத்து கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன..
குறித்த பொலிஸ் விசேட குழுவே சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment