
சரி 1987ம் ஆண்டு நடந்தது என்ன ? விடையத்துக்குச் செல்வோம்:
ஹாங்காங் நாட்டில் வசித்துவந்த அமெரிக்கர் ஒருவரும், கிழக்கு மாகாணத்தில் வசித்துவந்த உள்ளூர் வர்தகர்கள் சிலரும் சேர்ந்து 1987ம் ஆண்டு செரண்டிப் கடல் உணவு நிலையம் ஒன்றை ஆரம்பித்தனர். இதற்காக காணிகள் கொள்வனவு செய்யப்பட்டது. இதற்கு இடைத் தரகர் வேலைபார்த்த ஆள் தான் சாம் தம்பிமுத்து ஆவார். இவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க உறுப்பினர். கள்ளவோட்டில் வென்று எம்.பி ஆக இருந்தவர். அப்போது 1 ஏக்கர் தரிசு நிலம் ரூபா 2500 க்கு விற்கப்பட்ட காலம். ஆனால் இவரோ மக்களின் காணிகளை, செரண்டிப் நிறுவனத்துக்காக வாங்குவதாகக் கூறி பணத்தைப் பெற்று, 2500 ரூபா கொடுக்கவேண்டிய இடத்தில், 500 ரூபாயைக் கொடுத்து உறுதிகயை மாற்றிக்கொண்டார். இதனால் பல குழப்பங்கள் எழுந்ததால், அந் நிறுவனம் இவரை வேலையில் இருந்து நிறுத்தியது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த இந்த நாதாரி சாம் தம்பிமுத்து, எண்ணிப்பார்க்க முடியாத ஈனச் செயலில் இறங்கினார்.

அவர்கள் கனடாவுக்குச் செல்ல விசா விண்ணப்பம் செய்தனர். செய்துவிட்டு வெளியே வரும்போது கனேடிய தூதரகத்துக்கு முன்னால் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர் ! இதுவே நடந்த உண்மை. பணத்துக்காவும், பேராசைக்காவும் 86 பேரின் உயிரைக் குடித்த நாதாரி சாம் தம்பிமுத்து, ஒரு தமிழனா ? ஈனப்பிறவியான அவரை புலிகள் ஏன் கொன்றார்கள் என்பது மக்களுக்கு இப்போது நன்கு புரியும். ஆனால் 25 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் மகன் அருன் தம்பிமுத்து தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். நூலைப் போல சேலை, தாயைப்போல பிள்ளை என்பார்கள் ! அதுபோல அருன் தம்பிமுத்துவும், தனது வாலை ஸ்ரீலங்கா அரசுக்கு ஆட்டிக்கொண்டு தற்போது வலம் வர ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு பிரதேசவாதம் பேசிவரும் இவர், வர இருக்கும் தேர்தல்களில் இலங்கை அரசு சார்பாக போட்டியிடவும் உள்ளார். 86 பேர்களின் ரத்தகறை படிந்த இவரும், இவரது குடும்பமும் தமிழினத்தின் துரோகிகள் என்பதனை வரலாறு மறந்துவிடாது ! தமிழ் மக்களும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட மாட்டார்கள் !

No comments:
Post a Comment