இலங்கையின் மனித உரிமை தொடர்பாக கதைப்பதற்கு அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் கிடையாது என இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மிகவும் மோசமான முறையில் மனித உரிமைகளை மீறுவது அமெக்காவே இதனை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். எனக் கடிந்துள்ள சம்பிக்க,
இலங்கையின் தேசிய அரசியலை விமர்சிக்கும் உரிமை எந்தவொரு மேற்குலக நாட்டிற்கும் கிடையாது அதற்கான அனுமதியை ஆட்சியிலுள்ள அரசாங்கம் வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுதுள்ளார்.
பல நாடுகளில் மனித உரிமைகள் நிலை குறித்து அமெரிக்கா விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் எமது நாடு தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
குடும்ப ஆட்சி, ஆள்கடத்தல், ஊடக அடக்குமுறையென்று பல்வேறு குற்றச் சாட்டுக்களை அடிப்படையற்ற முறையில் அமெரிக்கா முன்வைத்துள்ளது. இதனை ஜாதிக ஹெலஉறுமய கட்சியானது வன்மையாக கண்டிப்பதாகவும் சம்பிக்க தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் உள்விவகாரங்களில் அநாகரிகமான முறையில் இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன்,
நாட்டின் பிரிவினைவாத சக்திகளுக்கு ஏற்ற வகையில் நாட்டின் அரசியல் சூழலை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலமையிலான சர்வதேச குழுக்கள் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment