தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் தற்போதுள்ள ஆட்சியை கவிழ்க்க முடியும் என அண்மையில் விடுதலையான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ரொயிட்டஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கு இன்னும் 05 அல்லது 10 வருடங்கள் செல்லும் என தெரிவித்த அவர் 'என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது ஆனால் இன்னும் அரசியலில் ஈடுபட முடியும்' என தெரிவித்துள்ளார்.
என்னால் மக்களுக்கு கற்பிக்க முடியும். என்னால் மக்கள் மத்தியில் உரையாற்ற முடியும். கூட்டங்களை நடத்த முடியும்'. 'இந்த அரசாங்கத்தை கவிழ்த்து மற்றுமொரு அரசாங்கத்தை ஏற்படுத்தி மக்களின் நலன்காக்க என்னால் முடியும்' என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே தனக்கு விடுதலை கிடைத்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment