இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியா வருமாறு தான் அழைக்கவில்லை என்று பா.ஜ.க. மூத்தத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கை வந்த போது வைரக்கல் அட்டியலும், பெருந்தொகை அன்பளிப்புக்களும் வழங்கிய மகிந்தவை தான் சாஞ்சியில் நடக்கும் விழாவுக்கு வருமாறு அழைக்கவில்லை என்றும் இந்திய அரசுதான் அழைத்துள்ளது என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சியில் செப்டம்பர் 21ஆம் திகதி புத்தமதம் தொடர்பான கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த பா.ஜ.க. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கடந்த 3ஆம் திகதி தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
இதனிடையே, இந்தியா வரும் ஜனாதிபதி மஹிந்தவை நாங்கள் எதிர்ப்போம் என்று மாநில பா.ஜ.க. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதியை இந்தியா வருமாறு தான் அழைக்கவில்லை என்றும் மத்திய அரசு அழைத்ததாலேயே இந்தியா வர உள்ளார் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment