தமிழகத்தில் சிங்களவர்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால் இலங்கைக்கு வரும் இந்தியர்கள் மீது தாம் பதில் தாக்குதல் நடத்த வேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக செயற்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு மனநோய் பயிற்சி வழங்க வேண்டும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முட்டாள்தனமாக செற்படுவதால் இலங்கை – இந்திய உறவில் பாரிய விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் இவ்விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசு கூடிய கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment