Translate

Saturday 24 December 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கி வைத்தார்!

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளமான www.naathamnews.comஇணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார்.
நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த அமர்வின் போதே நாதம் செய்திகள் இணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார்.

நாதம் செய்தித்தளத்தில் நா.த.அரசாங்கம் உத்தியோகபூர்வ செய்திகள் மற்றும் அறிக்கைகளை அனைவரும் பார்வையிடலாம். இதேவேளை தமிழர் நலனை முன்னிறுத்திய பிற செய்திகளும் இத்தளத்தில் இணைக்கப்படும் என தகவல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நா.த.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சகத்தின் செயற்த்திட்டங்களின் விரிவாக்கத்தின் ஒரு கட்டமாக நாதம் தகவல் இணையம் ( Naatham Infos Network) பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இயங்கவுள்ளது.

No comments:

Post a Comment