வடக்கு கிழக்கில் தமிழர்வாழ்இடங்களில் உள்ள படைமுகாம்கள் ஒருபோதும் அகற்றப்படமாட்டது என அரசதரப்பு பிரதமகொறடா தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முழு மாநிலங்களிலும் படைமுகாம்கள் உள்ளன. அவற்றை யாராவது அகற்றுமாறு கூறமுடியுமா என நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாடுமுழுவதும் படைமுகாம்கள் உள்ளன. இவற்றை அதியுயர் பாதுகாப்பு வலயம் என்று கூறிவிடமுடியாது. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. படையினர், மக்களிடம் தாங்கள் இருந்த கட்டடங்களை ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment