Translate

Thursday, 11 October 2012

மகிந்த எத்ற்கும் பயப்பட மாட்டார் : குண்டர்படை அமைச்சர்

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் போன்ற கல்வி கற்றவர்கள் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதுடன், முறையாக செயற்பட வேண்டும் என்று மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தரணிகள் அண்மையின் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து இன்று ஜா-எல பிரதேசத்தில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
கொடிபிடித்து, பதாகை ஏந்தி, சவப்பெட்டியை தூக்கிச் சென்று எரிப்பதாலும் ஜனாதிபதி மஹிந்த எதற்கும் பயப்பட மாட்டார் எனவும் பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த கீரைக்கடை வியாபாரியும் பல கொலைகளுக்குப் பொறுபானவருமான மேர்வின் சில்வா, இலங்கை அரசியலில் செல்வாக்கு மிக்கவர்.

No comments:

Post a Comment