Translate

Thursday, 11 October 2012

நாட்டில் சட்ட ஒழுங்கை பேண வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்: சோபித தேரரரும் எதிர்ப்பு.

Posted Imageநாட்டின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார். நீதித்துறை, அதன் சுயாதீனத்தை இழந்துவிட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் மக்கள் உயிராபத்துக்களுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது சுயநலத்துக்காகவும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்காகவும் அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புக்களையும் உதாசீனம் செய்கின்றது. இப்போது மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரான மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதல் ஒரு தனியார் மீதான தாக்குதல் அல்ல. இது முழ சட்ட சமுதாயத்தின் மீதான தாக்குதல் என சட்டத்தரணி ரவி கருணாரத்ன தெரிவித்தார். மஹிந்த சிந்தனையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என அவர் கூறினார்.
ஜனாதிபதி நீதித்துறைக்கோ நாடாளுமன்றத்துக்கோ மக்ளுக்கோ பொறுப்புக்கூற வேண்டியதில்லை. எனவே சட்டம் ஒழுங்கை பேண வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். தேர்தல்கள், ஊடகங்கள் மற்றும் அரசாங்கம் என்பவற்றில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினரான எல்மோ பெரேரா கூறினார்.
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment