Translate

Thursday, 11 October 2012

கூட்டமைப்பை சந்தித்த பின்னர் மகிந்தவை அடுத்தவாரம் சந்திக்கிறார் மன்மோகன்சிங்

Posted Imageதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை அடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


முதலாவது ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் உச்சி மாநாடு வரும் 15ம் நாள் குவைத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாடு வரும் 17ம் நாள் வரை இடம்பெறும்.

இதில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட 31 ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குவைத்தில் தங்கியிருக்கும் போது, பக்க நிகழ்வாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இருதரப்புப் பேச்சுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான நாள், நேரம் என்பன குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

கடந்தமாதம் 20ம் நாள் மகிந்த ராஜபக்சவும், மன்மோகன்சிங்கும் புதுடெல்லியில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

குவைத்தில் இவர்கள் மீண்டும் சந்தித்தால், ஜெனிவாவில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டம் தொடர்பாக கலந்துரையாடப்படலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் இந்தியா இன்று ஆரம்பிக்கும் பேச்சுக்களின் விபரங்கள் குறித்தும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபருக்கு எடுத்துக் கூறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.puthinapp...?20121011107116 

No comments:

Post a Comment