சிலாபம் முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கு இராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஜாதிக ஹெல உறுமய பௌத்த பிக்குகள் கட்சி தடையாக இருக்கின்றனர் என கோயிலின் தர்மகர்த்தாவும் தலைமைப் பூசாரியுமான பத்மநாப குருக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
கோயிலின் இராஜகோபுரம் அமைப்பதற்கான அனுமதி கேட்டு மாதம்பை பிரதேச செயலகத்திலே கடந்த மே மாதமே தாங்கள் விண்ணப்பித்துவிட்டாலும் இன்றுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்இ
இராஜகோபுரம் அமைப்பதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டபோதுஇ அந்த இடத்தில் சந்தன வட்டக்கல் ஒன்று கிடைத்தது எனினும் இது பௌத்த மத சாயல் கொண்டுள்ளது என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.
அதன்படி கோயில் வளாகத்தில் இருக்கின்ற அரச மரம் பௌத்தர்களுக்கு புனிதமான மரம் என்றும் ஆதலால் இராஜகோபுரத்துக்கான அஸ்திவாரத்தை அவ்விடத்தில் அமைக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.
எனினும் அஸ்திவாரம் போடவதற்கான பணிகள் நடைபெற்ற நிலையிலும் இது பௌத்த தொல்லியல் பகுதி என பிக்குமார் கூறிவருவது எமக்கு கலக்கத்தைத் தருகின்றது.
அத்துடன் ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மேதானந்த தேரர் இந்தக் கோயில் பகுதிக்கு வந்து பார்த்துவிட்டுஇ இது பௌத்த புனித பிரதேசம் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தும் வருகின்றார்.
விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடம் பிக்குமார் தங்கிய பிரதேசம் என்றும்இ செட்டிமார் மடம் பௌத்த ஆறாமைகள் என்றும்இ திருக்குளம் அமைந்திருக்கின்ற இடம் பௌத்த சைத்தியம் அமைந்திருந்த இடம் என்றும் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரதேச சபையின் அனுமதி பெற்று கோயில்கள் கட்ட வேண்டும் என்ற நிலை பௌத்த ஆலயங்களுக்கு இல்லை மாறாக இந்து ஆலயங்களுக்கு அத்தகையதொரு இறுக்கமான நிலை காணப்படுகின்றது.
இருப்பினம் குறித்த கோபுரம் பதினொரு தளங்களைக் கொண்டு அமையும் என்று நாம் குறிப்பிட்டிருந்த நிலையில்இ மூன்று மாடிக் கட்டிடங்கள் வரைதான் பிரதேச சபை அனுமதியளிக்க முடியும் என்றும் அதற்கும் உயரமான கட்டிடங்களுக்கு மாகாண தலைமைப் பொறியாளரின் அனுமதி வேண்டும் எனவும் பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment