Translate

Saturday, 13 October 2012

தீர்வு முயற்சியில் இந்தியா தீவிர அக்கறை கூட்டமைப்பின் பயணம் அதன் எதிரொலி; அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

தீர்வு முயற்சியில் இந்தியா தீவிர அக்கறை கூட்டமைப்பின் பயணம் அதன் எதிரொலி; அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு
news
 "தீர்வு விடயத்தில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதன் காரணமாகத்தான் கூட்டமைப்பை அழைத்து அது பேச்சு நடத்துகின்றது. எனவே, இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை. "பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்' என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருந்து வருகின்றோம்.''

 
இவ்வாறு லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஒரு தரப்புடன் பேசு வதை விட பல தரப்புகளுடனும் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதே சிறந்த வழிமுறையாகும். 
 
எனவே, தீர்வு விடயத்தில் தெரிவுக்குழுவை நோக்கி கூட்டமைப்பு பயணித்தால் சிறந்ததாக அமையும் என்றும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
 
அமைச்சர் மேலும் கூறி யவை வருமாறு:
 
தேசிய இனப்பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற தெரிவுக் குழுவுக்கு வரா ததன் காரணமாகத்தான் சிக்ககள் ஏற்பட்டுள்ளன. கூட்டமைப்பு அதில் அங்கம்வகித் தால் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நாம் நகரலாம்.
 
ஒரு தரப்புடன் பேச்சு நடத்துவதை விட பல தரப்புகளுடனும் பேச்சு நடத்தி தீர்வைக் காண்பதுதான் சிறந்த உபாயமாகும். அதற்கான சிறந்த பொதுக்களம்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும். எனவே, அதில் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும்.
 
தீர்வு விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளதால்தான் இந்தியா கூட்டமைப்பை அழைத்துள்ளது. இதில் விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு கூட்டமைப்பிடம் இந்தியா சொல்லவேண்டும் என நான் கருதுகின்றேன்  என்றார்.

No comments:

Post a Comment