Translate

Saturday, 13 October 2012

அரசியலமைப்பிற்கு முரணான த.தே.கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்காது

அரசியலமைப்பிற்கு முரணான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என சகோதரமொழிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு முரணானதும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலுமான கோரிக்கைகளை அரசாங்கம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கிடம் இலங்கையின் தேசியப் பாதுகாப்பு பற்றி கலந்துரையாடியுள்ளனர். வன்னிப் போரின் போது உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை அகற்றுதல் மற்றும் புதிதாக இராணுவ முகாம்களை உருவாக்கக் கூடாது என கூட்டமைப்பினர் கோரியுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடையாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 259 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையையும் அரசாங்கம் நிராகரித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment