Translate

Saturday, 13 October 2012

இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதால் இந்தியாவுக்கே பாதிப்பு; பொன். ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதால் இந்தியாவுக்கே பாதிப்பு; பொன். ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
news
இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதால் இந்தியாவுக்கே பாதிப்பு ஏற்படும் என பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் நம் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

இலங்கையில் இராணுவமே தேவையற்ற நிலையில் அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதன் மூலம் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பயிற்சி நிறைவு செய்த பின்னர், நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment