“முடியட்டும் கூடங்குளம் கூத்து”
துக்ளக் பத்திரிகையின் 26.9.2012 இதழில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார் சோ “முடியட்டும் கூடங்குளம் கூத்து” என்ற தலைப்பில். “விடுதலைப் புலிகளைப் போல பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி, போலீசாருடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டும்” என்று மீண்டும் ஓலம் இடுகிறார் சோ.
“எங்கே பிராமணன்” என்று தேடிக்கொண்டிருக்கும் சோவுக்கு பிரச்சினை அணுமின் நிலையம் அல்ல. பிராமணர் அல்லாத சாமான்ய மக்கள், அதாவது படகோட்டி, பனையேறி, பலசரக்குக் கடை நடத்துபவர், தலித் மக்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள் போன்றோர் பிராமணீயம் எடுக்கும் முடிவுக்கு எதிராக, போடும் திட்டங்களுக்கு எதிராகப் பேசுவதை, போராடுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவாள் சொல்வதைக் கேட்டு அடங்கி நடக்க வேண்டிய நாம், சூத்திரர்கள், எப்படி எழுந்து நிற்க முடியும், போராட முடியும்? இதுதான் சோவின் பிரச்சினை.
No comments:
Post a Comment