இன்று 12.10.12 காவிரியிர் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை தடை செய்ய வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அனல் மின் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டரில் திரு.வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். உடனே ராஜாஜி சாலையில் திரு.வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் அனைவரும் அமர்ந்து சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம் சுமார் ஒன்றரை மணியளவில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த முற்றுகைப்போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களோடு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மதிமுக பொருளாளர் மருத்துவர் மாசிலாமணி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் சேரன், நாகப்பட்டனம் மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.மோகன், கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். ஆர் .மோகன்குமார், கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணி, வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன், தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோமு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தின இதழ் கண்ணன், கேசவன் நாராயணன், மாறன் உள்ளிட்ட இணைய அணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
__._,_.___
No comments:
Post a Comment