Translate

Saturday 13 October 2012

இவர்களை நம்பியா இருக்கிறோம்?

இவர்களை நம்பியா இருக்கிறோம்?

பனி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலை தெறிக்க ஓடினார்கள்.

ஓட ஓட விழுந்தார்கள். மூச்சடைத்து, கை - கால்கள் வெட்டி வெட்டி இழுக்க விழுந்து செத்தார்கள். காலையில் பார்த்தபோது கொத்துக் கொத்தாகப் பிணங்கள். பல நூற்றுக்கணக்கான பறவைகள், கால்நடைகள், மனிதர்கள்... அரசாங் கத்தின் துரோகத்தாலும் முதலாளிகளின் லாப வெறியாலும் ஒரு நகரம் உருக்குலையத் தொடங் கியது. போபால்... உலகின் மோசமான. . .தொழில் வேட்டைக் கொலைக் களம்!...

போபால் பேரழிவுக்குப் பிந்தைய இந்த 28 ஆண்டுகளில், போபால் துயரத்தைக் கடந்து நாம் எவ்வளவோ தூரம் வந்திருக்கலாம். ஆனால், 'யூனியன் கார்பைடு நிறுவனம்’ பறித்த உயிர்களின் ஆன்மாக்கள் இந்தியாவின் மனசாட்சியைத் தொடந்து உலுக்கிக்கொண்டே இருக்கின்றன. 5,925 மரணங்கள், 4,902 நிரந்தர ஊனமுற்றோர், 5,63,352 பேர் பாதிப்பு, பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தை ஆகிய கொடூரங்களை எல்லாம் தாண்டி, இன்னமும் விஷத் தைக் குடித்துக்கொண்டு இருக்கும் போபால் மக்களை இந்தியா எப்படி வேடிக்கை பார்க்கிறது என்று கேட் கின்றன அந்த ஆன்மாக்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மேற்கொண்ட ஆய்வு, போபாலில் 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்ட இடத்தைச் சுற்றி மூன்று கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகி இருப்பதை உறுதி செய்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் மேற் கொண்ட பரிசோதனையோ, 'ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் 2,400 மடங்கு வரை ரசாயனக் காரணிகள் அடங்கிய தண்ணீரைக் குடிக்கிறார்கள் போபால்வாசிகள்’ என்கிறது. ''இங்கு 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்டபோது, அது பூச்சிக்கொல்லியை உருவாக் கியது. அது மூடப்பட்ட பிறகு, புற்றுநோயாளி களையும் சிறுநீரக நோயாளிகளையும் உருவாக் கிக்கொண்டு இருக்கிறது'' என்கிறார்கள் போபால்வாசிகள். காரணம், ஆலையைச் சுற்றி பரவியிருக்கும் 350 டன் நச்சுக் கழிவுகள்.

நன்றி: ஆனந்தவிகடன், 17-10-2012 

No comments:

Post a Comment