Translate

Wednesday, 15 February 2012

மாணவன் ! கவிஞர் இரா .இரவி



மாணவன் !              கவிஞர் இரா .இரவி


ஆசிரியருக்கு அஞ்சிய காலம் அன்று
ஆசரியர்
கள் அஞ்சும் காலம் இன்று

ஆசிரியரை வணங்கிய காலம் அன்று
ஆசிரியரைக் கொலை செய்யும் காலம் இன்று 
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தார்கள்

மாணவர்களே ஆசிரியர்களை மதியுங்கள்
மதித்து நடந்தால் உலகம் உங்களை மதிக்கும் 


மாணவனை
க் கொலைகாரனாக மாற்றும்
திரைப்பட வன்முறைக
களை நிறுத்துங்கள் !

ஆங்கிலப் பள்ளிகளின் கெடு பிடிகள்
பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறை நஞ்சு

மாவட்ட ஆட்சியரின் ஆய்வில்
மதுக்
கடையில்  சீருடையோடு மாணவன்

தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கற்பியுங்கள்
இந்தி சமஸ்கிருதம் 
வகுப்புகளை உடன் மூடுங்கள் 

நிறுத்தப்பட்ட நீதி போதனை வகுப்பை அனைத்து  பள்ளிகளிலும்  உடன் தொடங்கிடுக !மிக நல்ல மாணவன் நாளை 
மிகச் சிறந்த ஆசிரியராவான் !

கற்க கசடற கற்றபின்
அயல்நாடு செல்லாதிருக்க ! 

ஏன் ? எதற்கு ? எப்படி ?
என்று  கேட்க    சிறக்கும் மாணவன் 


-- 
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

No comments:

Post a Comment