தம்புள்ளை காளி கோயிலுக்கு மகிந்தவின் முப்படையினரும் விசேட பாதுகாப்பு!
தம்புள்ளை சர்ச்சைக்குரிய மதவழிபாட்டுத் தளங்களை அப்புறப்படுத்த அந்தப் பிரதேச பௌத்த பிக்குகள் முயற்சித்து வருகின்ற நிலையில், பிரதேசத்திலுள்ள காளிகோயிலுக்கு முழுப் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் ஒன்றும், இந்துக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்புள்ளை விகாரையின் பௌத்த பிக்கு தலைமையில் கும்பலொன்று அடாவடித்தனம் செய்து வருகிறது.
எனினும், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் காளி கோயிலை சேர்த்துக்கொள்ள வேண்டாம் எனவும், அந்தக் கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குமாறும் பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு மகிந்தர் உத்தரவிட்டுள்ளார்.
சிரேஷ்ட சோதிடர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகிந்தர் உரையாடிய பின்னர், பொலிஸ்மா அதிபருக்கு அவசரமாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தம்புள்ளை காளி கோயிலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது மகிந்தரயை வெகுவாக பாதிக்கும் எனவும், இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், மே 09ஆம் திகதி இடம்பெறும் குரு பெயர்ச்சியினால் ஜனாதிபதிக்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் சோதிடர், மகிந்தருக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் கிரக மாற்றத்தின்போது நாட்டில் இருக்க வேண்டாம் எனவும் மகிந்தருக்கு சோதிடர் அறிவுரை கூறியுள்ளார்.
இதன்பின்னரே தம்புள்ளை காளி கோயிலுக்கு முழுமையான பாதிப்பை வழங்குமாறு மகிந்தர் , பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அதிரடிப்படையினர் உள்ளிட்ட முப்படையினரும் இணைந்து காளி கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளனர். அத்துடன், மகிந்தரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் இந்தப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment