Translate

Monday, 30 April 2012

தமிழ் வர்த்தகரின் சகாவிற்கு வெள்ளை வேன் அனுப்ப கோதா திட்டம்!


தமிழ் வர்த்தகரின் சகாவிற்கு வெள்ளை வேன் அனுப்ப கோதா திட்டம்!

பிரபல தமிழ் வர்த்தகரும்,  மகிந்த ராஜபக்‌ஷவின் யாக, பூஜைகளின் இணைப்பாளருமான திரு.நடேசனின் பிரதான சகாவான ரவிச்சந்திரன்எனப்படும் ‘செல்டெல் ரவி’யை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு  கோதாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்‌ஷவிற்கு நெருக்கமான திரு நடேசனின் சகாவாக ரவிச்சந்திரன் இருந்த போதிலும், அரசப் புலனாய்வுப் பிரிவினர் ரவிச்சந்திரன் என்ற நபர் ”டபள் கேம்” அடிப்பவர் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவரைக் கைதுசெய்வதற்கோ அல்லது வெள்ளை வேனில் கடத்துவதற்கோ பாதுகாப்புச் செயலாளர் திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் பிரபல அரசியல்வாதிகளுடன் நெருக்கமான செயற்பட்டுவரும் ரவிச்சந்திரன், நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் கையெழுத்துடன், இணைப்பாளர் என்ற அடையாள அட்டையை உடன்வைத்திருப்பதாகவும், இதனைக் காண்பித்து பாதுகாப்புத் தரப்பினரையும் தவறாக வழிநடத்துவதாகவும் பாதுகாப்புச் செயலாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அரசாங்க அரசியல்வாதிகளின் பல்வேறு சட்டவிரோத கொடுக்கல், வாங்கல்களை மிகவும் சூட்சமமான முறையில் மேற்கொண்டுவரும் ரவிச்சந்திரன், அண்மைக்காலமாக அந்தத் தகவல்களை மாற்று ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் வழங்கியுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட கோதாபய ராஜபக்‌ஷ, ரவிச்சந்திரனைக் கைதுசெய்வதற்கு அல்லது வெள்ளைவேனில் கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.தாய்த்தமிழ் செய்திகள்.

No comments:

Post a Comment