இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களின் பயிற்சி நிறைவு எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது என இராணுவத் தரப்பு தெரிவித்திருந்தது.
பயிற்சி பெறும் தமிழ் பெண்களுக்கு எதிர்வரும் 03 ஆம் திகதி பயிற்சி நிறைவு இடம்பெறவுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாட்சியின்றி நடத்தப்பட்ட இனப்படுகொலை போன்று சாட்சியின்றி மர்மமாக அழுகுரல்கள் மத்தியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை இதுவரை பார்வையிட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment