Translate

Friday, 28 December 2012

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! Read more about முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! [7557] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை!இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிங்களர்களின் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்ப்பதாக, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
"முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.


மேலும் புதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பும், மேலும் சில சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு, முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என சிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் அராஜக செயல்கள் அனைத்தும் தொடர்ந்தபடி உள்ளன.

எனவே அரசு இதில் முறையாக தலையிட்டு அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும். இல்லையெனில், முஸ்லிம்கள் தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டி வரும்." என்று அஸாத் ஸாலி கூறியுள்ளார்

No comments:

Post a Comment