ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் புதுவருடத்தில் பகிரங்க விவாதம் ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுக்கின்றது.
தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையிலேயே இந்த விவாதம் நடைபெறவிருக்கின்றது.
பகிரங்க விவாதம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment