Translate

Friday, 12 October 2012

இலங்கை அரசிற்கு சாட்டை அடி - பிரித்தானியாவில் தமிழர்களுக்கு ஆளும்கட்சியில் தனித்துவ அந்தஸ்த்து!


பிரித்தானியாவின் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி (conservative) தனது கட்சிக்கான உப கட்சியாக பிரித்தானியத் தமிழர்களைக் கொண்ட உபகட்சியாக British Tamils Conservative (BTC) எனும் அமைப்பை உத்தியோக பூர்வமாக அங்குராற்பணம் செய்து வைத்துள்ளது. 
இப்புதிய கட்சியில் பிரித்தானியத் தமிழர்கள் மட்டுமல்லாது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். கடந்த செவ்வாய்க் கிழமை (09.10.2012) நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக 
btc09102012uk05.jpgbtc09102012uk07.jpg
Rt. Hon. Thersa Villeris, MP & Minister (Secretary of State for Northern Ireland)
Lee Scott MP (Chairman, All party group for Tamils)
Dr. Syed Kamal  MEP 
Rt Hon. Grant Shapps, MP (Conservative party Chairman)
Jackie Doyle-Price MP, 
Robert Halfon, MP for Harlow, Rt. Hon.
Dr. Rachel Joyce, 
Roger Evans (GLA member), 
Dr. Charles Tannock, MEP, 
Liam Fox, MP, 
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.


இந் நிகழ்வில் தமிழர்தரப்பு British Tamils Conservative பிரதினிதிகளாக.
Mr. Karan Paul
Dr. Rajah
Dr. Archuna Sivanthan
Mr. patrick Ratnaraja
Mr. Vijay Jeyanthan
Mrs. Thaksha Ravikulan
Mr. Ruthirapathy Seker
Mr. Vasi
ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.  பல்லின மக்கள் வாழும் பிரித்தானியாவில் தமிழர்தரப்பிற்கு கிடைத்த முதலாவது உரிமை என்று இதனை சொல்லலாம்.

இவ்வாறான கட்சியை உருவாக்குவதற்கும், அதனூடான தமிழர்கள் தரப்பு விடையங்களை பிரித்தானியப் பாராளுமன்றம் வரை கொண்டுசென்று அதனூடாக இலங்கைத் தீவில் தமிழர்கள்உக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியை தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்விற்கான பிரித்தானிய அரசின் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிக்காகவும் நீண்ட காலமாக அயராது உழைத்து வந்த MRS. Hazel Weinberg, மற்றும் MR. KARAN PAUL ஆகியோரின் முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இக் கட்சியின் அங்குராற்பண நிகழ்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறீலங்கா அரசோடு கூட்டுச் சேர்ந்து இதுவரை காலமும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டுவந்த Liam Fox - MP தற்போது இக்கட்சியில் இணைந்திருப்பது அனைவரையும் நண்பர்களாக மாற்றி தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முனையும் புலம்பெயர்ன்து வாழும் தமிழ் மக்களின் முயற்சிக்கு வலுச்சேர்த்துள்ளது எனலாம். 

பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள், குறிப்பாக இளையோர் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இப் புதிய British Tamils Conservative (BTC) குழுவில் இணைந்து செயற்படவும், தமது சிந்தனை, செயற்திறண் ஊடாக சர்வதேச நாடுகளை வென்று அதனூடாக இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வைக்க முன்வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment