Translate

Friday, 12 October 2012

நெய்வேலி அனல் மின்நிலையம் முற்றுகை: வைகோ கைது!


கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை நிறுததக்கோரி நெய்வேலி அனல் மின்நிலையத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலையங்களில் உற்பத்தியாகும் ஒரு பகுதி மின்சாரம் கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காவிரி ஆணையமும்,உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடகா மறுத்து வருகிறது.

இதற்கு பதிலடியாக நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகாவுக்கு அனுப்ப கூடாது என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அதன் ஒருபகுதியாக நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க கூடாது என வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தார்.

இதற்காக வைகோ நேற்று இரவே என்.எல்.சி. விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்கினார்.

முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க கடலூர், அரியலூர், விழுப்புரம், நாகபட்டினம் மாவட்டங்களில் இருந்து மதிமுகவினர் இன்று காலை முதல் நெய்வேலிக்கு வர தொடங்கினர்.

போராட்டத்தையொட்டி நெய்வேலி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.போராட்டம் நடைபெறும் தலைமை அலுவலகத்தில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர்.அவர்களை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment