
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இந்தியாவுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமாலை 5 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சுமார் 45 நிமிட நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூட்டமைப்பினரிடம் எடுத்து விளக்கினார். தமிழ் மக்கள் இலங்கையில் சுய மரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்ற தனது நிலைப் பாட்டிலிருந்து இந்திய அரசு பின்வாங்காது என்பதை மன்மோகன் தம்மிடம் வலியுறுத்தினார் என்று சம்பந்தன் தெரிவித்தார்.
http://www.seithy.co...&language=tamil
No comments:
Post a Comment