Translate

Thursday, 11 October 2012

உத்தரவாதம் அளித்தாலே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இணைய முடியும்: � சுமந்திரன்


அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மூலம் மட்டுமே, நிலை யான அமைதியை கொண்டுவர முடியும் என்பதை சிறிலங்கா அரச தலைமைக்கு புதுடெல்லி தெளிவு படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித் துள்ளார். 


இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது.
"மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்கியுள்ள அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மேலும் பலவீனப்படுத்தவதற்கான கருவியாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் உள்ளது.
தெரிவுக்குழுவில் 31 உறுப்பினர்கள் இருந்தாலும், எமக்கு 5 உறுப்பினர்கள் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 13வது திருத்தத்தை வலுவிழக்கச் செய்ய பரிந்துரைக்கலாம்.
தற்போதுள்ள அதிகாரப்பகிர்வுக்கு குறைந்த விடயங்கள் குறித்து தெரிவுக்குழுவின் நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படாது என்று சிறிலங்கா அரசு உத்தரவாதம் அளித்தாலே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இணைய முடியும்." என்று கூறியுள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அச்சம் அடிப்படையற்றது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். 13வது திருத்தத்தை வலுவிழக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதாகவும், அதை நாடாளுமன்றத்தின் மூலமே செய்ய முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment