Translate

Thursday 11 October 2012

யூதர்களைப் போன்று நாமும் நமக்கென ஒரு நாட்டினை உருவாக்க வேண்டும்! - நாடு கடந்த தமிழீழ அரசவைத் தலைவர் பொன் பால்ராஜ்

'தமிழர்களின் வரலாற்றை, விடுதலைப் போராட்டத்தை யூதர்களுடன் ஒப்பிடும்போது யூதர்கள் பாலஸ் தீன மக்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் எப்படி தங்களு க்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். அதுபோன்றே தமிழீழப் போராட்டத்தின்போது ஏற்பட்ட பிரச்சினைகள், முரண்பாடான கருத்துக்கள் என்ற வரலாற்றைப் பார்க்கின்றபோது 1891ம் ஆண்டு ஜியோ னிசம் என்று ஆரம்பிக்கப்பட்டு யூதர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்ற சிந்தனை உருவாகியது.
1948ம் ஆண்டு அவர்களுக்கு பல்வேறு காலகட்டத்தில் எதிர்கொண்ட தோல்விகளையும் தாண்டி, மீண்டும் மீண்டும் துளிர்த்தெழுந்து இறுதியில் சுதந்திரம் பெற்று இஸ்ரேல் என்ற நாட்டை பெற வைத்தது. அதுபோ ன்றே தமிழர்களுக்கு என ஒரு நாடு வேண்டும் என்ற சிந்தனை 1949ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி எடுக்கப் பட்ட தீர்மானத்தையும் , வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் மேற்கோள் காட்டி யூதர்கள் போன்ற விடா முயற்சியும், சிந்தனையும் ஒருங்கிணைந்த செயல்பாடும் தொடர்ந்து நம்மிடையே அமைய வேண்டும்"
முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின் ஈழத்தமிழரின் அரசியற் பயணத்தில் தாயகத்தின் இன்றைய நிலை, கிழக்குமாகாணத் தேர்தலின் வகிபாகம்,உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியற் சூழ்நிலைகளைக் கையாளுதல்,மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நமது உறவுகளின் ஒற்றுமைக்காக மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகளும் தார்மீகப் பொறுப்பும் பற்றிய கருத்தரங்கு கடந்த மாதம் 30ம் திகதி ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய சமுதாய அரங்கில் நடைபெற்றது. கனடாத் தமிழர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் திரு பொன் பால்ராஜ் அவர்கள் உரையாற்றிய போது மேற்கண்டவாறு கூறினார். இக்கருத்தரங்கிற்கு இணையத்தின் தலைவர் திரு.வின் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
இக்கருத்தரங்கில் திருவாளர்கள்: திரு வின் மகாலிங்கம் நக்கீரன், முரளிதரன், டேவிட் பூபாலப்பிள்ளை (கனடா தமிழர் காங்கிரஸ்) , வின்சர் பல்கலைக் கழகப் பேராசிரியர் கலாநிதி சேரன், ஈழவேந்தன், முன்னாள் வீரகேசரி பிரதம ஆசிரியர் 'கலா சூரி' திரு சிவநேசச் செல் வன், நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் திரு பொன் பாலராஜன், திரு சு.இராசரத்தினம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
திரு.ஈழவேந்தன் உரையாற்றிய போது இலங்கை சுதந்திரமடைந்த நாட்தொடக்கம் தொடரும் தமிழின அழிப்பையும் எமது சுதந்திரப் போராட்டத்தில் இதுவரை எம்மால் எதுவித முன்னேற்றத்தையும் அடை ய முடியாமைக்கான காரணங்களையும் விளக்கி என்னென்ன தடைகள் வந்தாலும் சோர்வடையாமல் தொடர்ந்து நாம் போராடியே தீரவேண்டும் அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று வலியுறுத் தினார்.
அடுத்து உரையாற்றிய படைப்பாளிகள் கழகத் தலைவரும் த.தே.கூ.கனடாவின் தலைவரும் ஆன திரு நக்கீரன் இலங்கையின் சமூக பொருளாதார கலாச்சார அபிவிருத்திகளுக்கு பெரும் துணையாக நின்று பங்களிப்பு செய்த தமிழர்களின் பின்னணியையும் சிங்களவர்கள்கள் போன்றே தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் அனைத்தும் சமமாக வழங்கப்பட்டு உரிய அங்கீகாரமும், ஆட்சி அமைப்பில் உரிய இடமும் தரவேண்டும் என்ற உரிமைக்குரலெழுப்பியதற்கு, பயங்கரவாதிகள் எனக்கூறி திட்தமிட்டு இனப்படுகொலையும் செய்தார்கள். 60 ஆண்டு கால போர்வரலாறு முடிந்தும்,இன்னமும் அவர்களுக்கு நியாயம் வழங்கப்படாத நிலையே தொடர்கிறது. அன்று தொட்டு இன்று வரை நீடித்து வரும் அராஜகப் போக்கின் நிலமைகளையும் நாடு கடந்த தமிழீழ அரசு, கனடிய தேசிய காங்கிரஸ மற்றும் கனடா தமிழர் இணையம் போன்றவை மேற்கொண்டு வரும் செயல்பாடுகளைப் பாராட்டினார்.
கனடிய தமிழர் காங்கிரஸ் உறுப்பினர் திரு டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள் உரையாற்றிய போது கிழக்கு மாகாண சபை தேர்தல் எவ்வாறு திணிக்கப்பட்டது. அதனை நம் மக்கள் துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். 20-30 ஆண்டு காலத்திற்கு முன்பு கிழக்கு மாகாணத்திலே பிரபலமாக விளங்கிய முஸ்லிம் தலைவர்களால் வாக்கு வங்கிகளை நிரப்பு முடியமாற் போனது. 25 ஆண்டு வெற்றிடத்தை இப்போது நிரப்பியுள்ளார்கள் .
எதிர் வரும் பொதுத் தேர்தலில் கூடமுதலமைச்சர் பதவி அவர்களுக்குத் தேவை யென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சேர்ந்து அந்தத் தேர்தலை சந்திக்க வேண்டும் என பாடம் புகட்டி உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் முஸ்லிம்களுக்கு கிடைத்த ஒரு பெரும் தோல்வியாகத் தான் கருதுகிறேன். எனவே தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களோடு புதிய தலைமைகளை இனம் கண்டு, இணைந்து பணியாற்ற வேண்டும். நமது உறவுகளைப் பேணி வட மற்றும் கிழக்கு மாகா ணம் இணைந்து காத்திரமான ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும்' என்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் மேற்சபை உறுப்பினர் திரு ராஜரத்தினம் அவர்கள் உரையாற்றும் போது, "உலகத்தில் எந்த நாட்டிலும் இடம் பெறாத வகையில் நமது ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டதையும், அதற்கு அனை த்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்த நிலை மாறி, இன்று நமது மக்களிடம் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு தருணம் இது.
இதற்கு ஒரு கருத்துக் கணிப்பு மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் காரணத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு தீர்க்கலாம். பேசாப் பொருளாக பலரின் மனதில் உள்ள ஐயங்கள் தீர்க்கப்பட வேண்டும். மக்கள் இன்று எவரையும் நம்பத் தயாராக இல்லை. இந்நிலை மாறி நமது லட்சியங்களை அடைய நம்மிடையே ஒற்றுமையுணர்வுடன் கூடிய பலமும் சிந்திக்க வேண்டிய பொறுப்பும் தேவை என்றார்.
அடுத்து உரையாற்றிய கலாநிதி சேரன் அவர்கள் ஆரம்பத்தில் ஒரு சிறு கவிதையை வாசித்து முக்கியமான விடயங்களாக தனது கருத்துக்களை முன் வைத்தார். அதாவது கிழக்கு மாகாணத்தேர்தல், அங்குள்ள நிலமைகள், நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மற்றும் எதிர்காலத்தில் நாம் எடுக்க வேண்டிய சாத்யமான நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைத்தார்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை அங்குள்ள தமிழர் மற்றும் முஸ்லிம் இனத்தவருக்காக சமூக, அரசியல், பொருளதார உறவுகள் பலப்படுத்த வேண்டும். அண்டிப் பிழைக்கும் அரசியல் வழியில் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஒரு ஆட்சியை உருவாக்கிவிட்டது. எனவே ஒரு ஒருமைப்பாடு இரு இனத்திற்கும் ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற பல கருத்துக்க ளை தனது உரையில் முன் வைத்தார்.
முன்னாள் வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு சிவநேசச் செல்வன் உரையாற்றிய போது உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள பிரஜைகள் தங்களை ஒரு குறிப்பிட்ட நாட்டினர் என்று கூறுவதைப் பெருமையாகக் கருதுவது போல், தாயகத் தமிழர்களுக்கும் அந்நிலை ஏற்பட வேண்டும். புத்தர் போதித்த அன்பும் அகிம் சையும் மறக்கப்பட்டு பௌத்தம் என்ற பெயரில் சிங்கள அரசு நடத்திய தமிழனப் படுகொலை முள்ளி வாய்க்கால் இறுதிப் போர் மூலம் சர்வதேச அளவில் மனித உரிமை மீறள்களை அறிய வைத்து நமக்கு ஆதரவாக செயல் பட வைத்துள்ளது. முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு தமிழர்களின் பண்பாட்டு கலாச்சார மரபுகள் அனைத்தும் அறியச் செய்து நமது வரலாற்றினை புரிந்துகொள்ளச் செய்து உலகம் உள்ள வரை தமிழும் தமிழர்களின் பெருமைகளும் போற்றிப் பாதுகாக் கப்பட வேண்டும்" என்றார்.
திரு நடராஜா முரளீதரன் உரையாற்றிய போது 30 ஆண்டு கால போர்வரலாறு முடிந்தும், இன்னமும் அவர்க ளுக்கு நியாயம் வழங்கப்படாத நிலையை பல்வேறு மேற்கோள்களுடனும் விவரித்தார்கள். அன்று தொட்டு இன்று வரை நீடித்து வரும் அராஜகப் போக்கின் நிலமைகளையும், தமிழரசு கட்சி, நாடு கடந்த தமிழீழ அரசு, கனடிய தேசிய காங்கிரஸ மற்றும் கனடா தமிழர் இணையம் போன்றவை மேற்கொண்டு வரும் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார்.
இறுதியாக உரையாற்றிய திரு வின் மகாலிங்கம் அவர்கள் 'அனைத்துத் தமிழனத்தையும் அழிக்கும் வகையில் மகிந்த அரசு ஆயுதப்படைகளைப் பெருக்கி, முக்கால் பங்கினரையும் வடக்கு கிழக்கிலேயே தங்க வைத்து, தமிழர்கள் வாழ்ந்த பகுதியை சிங்கள மயமாக மாற்றி வருகின்றனர்.
கலாச்சார சீர்கெடு களும், குற்றச் செயல்களை ஊக்குவிப்பதும் தொடரும் நிலையாக உள்ளது. இந்நிலை நீடிக்குமானால் தமிழர்கள் வாழ்வு அனைத்தும் நிர்மூலமாக் கப்பட்டு, தமிழினமே அங்கு இல்லை என்ற நிலை உருவாகி விடும். இப்போது கிழக்கு மாகாணத்தின் ஆட்சி ஒரு தமிழர்கூட இடம் பெறாத சிங்கள ஆட்சியாளரின் பொம்மை ஆட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
இதே வகையில் வடக்கு மாகாணத் தேர்தலையும் நடத்தி அங்கும் இதே விதத்தில் தான் ஆட்சி அமைத்திட இலங்கை அரசு முனைகிறது. இவற்றுக்கு எதிராக நமது ஒற்றுமை உணர்வை பலப்படுத்தி தார்மீகப் போராட்ட உணர்வுடன் அனைவரும் ஒன்றிணைந்து துரித கதியில் செயல்பட வேண்டிய தருணமிது. இந்த விதத்தில் பல்வேறு அமைப்புகளின் நோக்கு, இலக்கு ஆகியவை அனைத்தும் ஒற்றுமையுணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்'என்றார்.

No comments:

Post a Comment