மெனிக்பாம் முகாமில் இருந்த இறுதிக் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டு சூரிபுரத்தில் குடியேற்றப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இன்று கையளிக்கப்பட்டன
பிரான்ஸிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலி மற்றும் வவுனியா வர்த்தகர்கள் ஆகியவற்றின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட முறையே 30 துவிச்சக்கர வண்டிகளும் உலருணவு பொருட்களும் மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பலர் கலந்துகொணடு இந்த உதவி பொருட்களை கையளித்தனர்.
No comments:
Post a Comment