Translate

Thursday 11 October 2012

வடக்கின் உண்மையான கருத்து, அபிலாஷைகளை வெளியிட ஆளுநரால் முடியாது: நீதிமன்றில் மாவை

(எஸ்.எஸ்.செல்வநாயகம்) 

வட மாகாணத்தின் உண்மையான கருத்துக்களையும் அபிலாஷைகளையும் முன்னுரிமை விருப்புகளையும் சரியாக வெளியிடுவதற்கு ஆளுநரால் இயலாது எனவும் அதற்கான தகுதி அவருக்கு இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உயர்நீதிமன்றில் இன்று தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 


அரசியலமைப்பின் 154 ஜீ (3) ஷரத்து ஒவ்வொரு மாகாணசபைக்கும் அனுப்ப வேண்டுமென கூறுகின்றது. இந்த சட்டவாக்க செயல்முறையில் மாகாண ஆளுநருக்கு வகிபங்கு ஏதும் இல்லை என மாவை சேனாதிராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த திவிநெகும சட்டமூலம் பற்றி தனது கருத்தை ஆளுநர் தெரிவித்தமை நிர்வாகத்துறை அதிகாரியொருவர் சட்டமியற்றும் அதிகாரத்தை பறித்தெடுப்பதற்கும் வலுவேறாக்கம் என கோட்பாட்டை மீறுவதாகவும் எனவும் இதன்மூலம் மக்களின் இறைமை மீறப்படுகிறது எனவும் அவர் முறையிட்டுள்ளார். 

மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இதே ஆளுநரின் அபிப்பிராயம் கேட்டு அனுப்பியது மாகாண சபைக்கு அனுப்பியதாகிறது என அவர் வாதிடுகின்றார். எனவே இந்த சட்டமூலம் சட்டமாகாது என அவர் மனுவில் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment